தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் சதம் விளாசிய திலக் வர்மா, அனைத்து புகழும் கேப்டன் சூர்யகுமார் யாதவை சேரும் என்றும் வாய்ப்பளித்த கேப்டனுக்கு நன்றி என உணர்ச்சிகரமாக கூறியுள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் 3 வது டி20 யில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டதால் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்த இடது கை பேட்டரான திலக்வர்மா,பிளேயர் ஆஃப் தி மேட்ச்' விருதை பெற்றார். 56 பந்துகளில் 107 ரன்கள் ஆட்டமிழக்காமல் விளையாடிய திலக், டி20யில் சதம் அடித்த 12வது இந்திய வீரர் என்ற பெருமையையும், 2 வது இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.