அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால், இனி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தாமதமாகும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். சட்டமேலவையில் பேசிய அவர், அரசு 7 லட்சம் கோடி கடன் சுமையால் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாக கூறினார். இதனால் அகவிலைப்படி உள்ளிட்ட இதர சலுகைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்தார்.