இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தகவல் பரவிய நிலையில், கச்சா எண்ணெய் போதுமான அளவு இருப்பு உள்ளதால், பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உறுதிபட தெரிவித்தார். சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் தேவையை விட அதிகமாகவே கிடைப்பதாக தெளிவுபடுத்திய அவர், உலக சந்தையில் புதிய நிறுவனங்களும் உள்ளே நுழைந்துள்ளதால், எங்குமே பற்றாக்குறை இல்லை என தெரிவித்துள்ளார்.