பிரபல பின்னணி பாடகர் மனோவின் 2 மகன்களும் மதுபோதையில் சிறுவன் உட்பட இருவரை கொடூரமாக தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக மனோவின் மகன்களை 10க்கும் மேற்பட்டவர்கள் சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காவல் துறையினர் சரியாக விசாரிக்காமல் அவசர அவசரமாக தனது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்து விட்டதாக புகார் தெரிவிக்கும் மனோவின் மனைவி, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.