சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மண்நாயக்கன்பட்டி கிராமத்தில் சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாமல் வயல்வெளியில் இறங்கி உயிரிழந்தவர்களின் உடலை தூக்கி செல்வதாக கூறும் கிராம மக்கள், சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.மனிதன் வாழும் போது தான் போராட்டம் என்றால், இறந்த பிறகும் இப்படியா என்று ஆதங்கப்படும் அளவிற்கு, சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாமல், வயல்வெளியில் உயிரிழந்தவரின் உடலை தட்டு தடுமாறி தூக்கி செல்லும் காட்சிகள்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது மண்நாயக்கன்பட்டி கிராமம். சுமார் ஆயிரம் குடும்பத்திற்கு மேல் வசித்து வரும் இந்த கிராமத்தில், உயிரிழந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய கூட வழியில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.