புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கும் வரை நிதி கிடையாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம், ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி, அதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல எனவும், மத்திய அரசு தமிழ்நாட்டை பிளாக்மெயில் செய்வதாகவும் குற்றஞ்சாட்டிள்ளார்.