தினக்கூலி முறையில் பேராசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெற்றது. அவுட்சோர்சிங் முறையில் ஆசிரியர்கள் நியமனம் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அந்த அறிவிப்பில் இருந்து பின்வாங்கியுள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மட்டுமே தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்ற மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் அவுட்சோர்சிங் முறையில் எடுக்கக் கூடாது என அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.