பிரபலங்கள் வீட்டில் கல் எறிவது, வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டுவது டிரெண்டாகி வருகிறது. இந்த வரிசையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் வந்து உள்ளது. இமெயில் மூலம் வந்த மிரட்டலை தொடர்ந்து, த்ரிஷா வீட்டில் வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் தீவிர சோதனை நடத்தினர். த்ரிஷா மட்டுமில்லாமல் நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்து இருக்கிறது. இவர்களுக்கு முன்னதாக, நீலாங்கரையில் உள்ள தவெக தலைவரும், நடிகருமான விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. யார் மிரட்டினர், எதற்காக இப்படி செய்கின்றனர் என எதுவும் தெரியாத நிலையில், இமெயில் வந்த முகவரியை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.