குஜராத் மாநிலம் வதோதராவில் தாறுமாறாக கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய இளைஞர், தாம் மது போதையிலும் இல்லை, அதிவேகமாகவும் காரை ஓட்டி வரவில்லை என தெரிவித்துள்ளார். மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்திலேயே காரை ஓட்டி வந்ததாகவும், சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்காமல் இருக்க வேகம் கூட்டிய போது முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மோதி விட்டதாகவும், அதனால் ஏர் பேக் திறந்து முன்பக்க கண்ணாடியை மறைத்ததே விபத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.