நகரும் விமான எஞ்சினில் குதித்து Pushups செய்த நபருக்கு கண்டனம் வலுத்து வருகிறது. சிட்னி விமான நிலையத்தில் ஜெட் விமானத்தின் எஞ்சினுக்குள் குதித்து Pushups எடுக்கும் 23 வயது பாடிபில்டர் Preslie Ginoski என்பவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. தனது ஸ்டண்ட் திறமையை காட்டி Preslie Ginoski வெளியிட்ட வீடியோ எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. அர்ப் லைக்குகளுக்காக பலரது உயிரை பணயமாக வைத்து மேற்கொண்ட இதுபோன்ற செயல்கள் கண்டிக்கதக்கது என விமர்சனங்கள் எழுந்தன. இது போன்ற பயணிகளின் பாதுகாப்பற்ற தண்மையை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என சிட்னி விமான நிலையம் இளைஞருக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.