சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு பூங்காவினை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 46 கோடி ரூபாய் செலவில் சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீன முறையில், கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கியும், ரிமோட் மூலம் பூங்காவினை திறந்தும் வைத்தார்.