திருப்பத்தூர் அருகே நிலம் உழுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பெண்கள் தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பத்தூர் மாவட்டம் அங்கநாதவலசை ஈச்சனேரி பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்பவருக்கும் சுந்தரியின் சித்தப்பா மகனான கோவிந்தசாமி என்பவருக்கும் இடையே 2 புள்ளி 5 ஏக்கர் அளவில் நிலத்திற்காக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், அந்த இடத்திற்கான பட்டா தன்னிடம் இருப்பதாக கூறி நிலத்தை உழுவதற்கு சுந்தரி டிராக்டரை எடுத்து வந்தாக கூறப்படும் நிலையில், டிராக்டரை உழுவதற்கு அனுமதிக்காத கோவிந்தசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுதாக தெரிகிறது.இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கோவிந்தசாமியின் தங்கை ஜானகி மற்றும் அவரது மகள் சாந்தி இருவரும் சுந்தரியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நிலையில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இரு தரப்பு பெண்களும் மாறிமாறி கடுமையாக தாக்கிக் கொண்டதோடு குடுமியை பிடித்து சண்டையிட்டு கொண்டனர்.இந்த நேரத்தில் கோவிந்தசாமி திடீரென அங்கிருந்து சென்று டிராக்டரை ஒன்றை எடுத்து வந்து ஏர் உழுவதற்கு சுந்தரி அழைத்து வந்த மற்றொரு டிராக்டர் மீது அதிவேகமாக மோதிய காட்சிகள் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு இருந்தது.வாக்குவாதத்தில் தொடங்கி, அந்த இடமே பெரிய போர்க்களமாக மாறிய நிலையில் சாந்தி என்பவர் கோவிந்தசாமியிடம் அந்த துப்பாக்கியை எடுத்துட்டு வா மாமா, சுட்டு தள்ளிரலாம் என கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் சுந்தரி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் அவரது சித்தப்பா பிள்ளைகளான கோவிந்தராஜ், தேவேந்திரன், கோவிந்தசாமி, ஜானகி மற்றும் ஜானகியின் மகள் சாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.