வேலூரில் பாலியல் தொல்லை அளித்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார். ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதில் படுகாயமடைந்த கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்த நிலையில், அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது மருத்துவ செலவு அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.