இந்த சமூகத்தில் ஆளுமையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பல்வேறு சட்டதிட்டங்கள், வரையறைகள் என்று தனித்தனியே தீர்மானிக்கப்படுகிறது. இதைத்தான் படிக்க வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள். இதில் கொஞ்சம் முரண்படும்போது பெண்கள் உடையத்தான் வேண்டி இருக்கிறது.கதைகளிலும், கவிதைகளிலும் முற்போக்கு பெண் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு பாராட்டுபவர்கள் எல்லாம் நிஜத்தில் அதை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.இப்படி தடைகளை மீறி தற்போது உலக நாடுகளை வழிநடத்தும் பெண் தலைவர்கள் யார்! அவர்கள் சாதித்தது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.இத்தாலியின் பிரதமராக இருக்கும் முதல் பெண் தலைவர் ஜியோர்ஜியா மெலோனி. இத்தாலி பிரதர்ஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 2022 அக்டோபர் முதல் இத்தாலி பிரதமராக இருக்கிறார்.அடுத்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் .. கடந்தாண்டு அக்டோபர் மாதம் மெக்சிகோ அதிபராகத் தேர்வான கிளாடியா, அந்நாட்டின் முதல் பெண் அதிபர் ஆவார்.டென்மார்க் நாட்டின் பிரதமராக மெட்டே ஃபிரடெரிக்சன் உள்ளார். இவர் கடந்த 2019 ஜூன் மாதம் முதல் டென்மார்க் பிரதமராக இருக்கிறார்.இதுபோல பல முக்கிய நாடுகளைப் பெண் தலைவர்கள் தான் வழிநடத்தி வருகிறார்கள். மற்ற துறைகளைக் காட்டிலும் அரசியலில் பெண்கள் சாதிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், அதையும் தாண்டி இந்த பெண் தலைவர்கள் சாதித்து வருகிறார்கள்.இப்படி பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கொண்டு இருந்தாலும் இதையெல்லாம் செய்ய ஆண்களை விட பெண்கள் இன்னும் சற்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி தான் இருக்கிறது. கணவன் அமைவதை பொறுத்தே பெண்களின் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்ட நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலைக்கு சென்று தங்களை பார்த்து கொள்ளும் பெண்களும் சாதனையாளர்கள் தான். இதையும் படியுங்கள் : 50வது பிறந்த நாளில் shock கொடுத்து அசத்திய மருமகள்.. பரிசுகளை கண்டு திக்குமுக்காடிய மாமியார்