நம்ம பூமி, ஒரு விண்கலத்தைப் போல விண்வெளியில் அதிவேகமா பறந்துக்கிட்டு இருக்கு. பூமி சுழன்றுக்கிட்டு இருக்கு, ஒரு நிமிஷம் கூட நிக்கலன்னு தெரியும். ஆனா, நாம ஏன் அதோட வேகத்தை, அந்த அசைவை உணரவே மாட்டேங்கிறோம்?பூமியின் வேகம் எவ்வளவுன்னு தெரியுமா?பூமி தன் அச்சில் சுழலும் வேகம், பூமத்திய ரேகையில் (equator) மணிக்கு சுமார் 1,000 மைல்கள் (1,670 கி.மீ).சூரியனைச் சுற்றி வரும் வேகம், மணிக்கு சுமார் 67,000 மைல்கள் (1,07,000 கி.மீ).இந்த அதிவேகப் பயணத்தை நாம உணராமல் இருக்க, முக்கியமா ரெண்டு காரணங்கள் இருக்கு:நாம ஒரு கார், ரயில் அல்லது ராட்டினத்தில் வேகமெடுக்கும்போதோ, திடீர்னு திரும்பும் போதோ, மெதுவாக்கும் போதோ தான் இயக்கத்தை உணருவோம். ஏன்னா, அந்த இயக்கம் சீரானதா (smooth) இருக்காது.ஆனா, பூமியின் இயக்கம், பில்லியன் கணக்கான வருடங்களாக மிகவும் சீராகவும், ஸ்திரமாகவும் இருக்கு. திடீர் உலுக்கலோ (sudden jolts) அல்லது நிற்குதலோ இல்லை.நீங்க ஒரு விமானத்துல cruising altitude-ல (சீரான உயரத்தில்) போறதை கற்பனை செஞ்சு பாருங்க. விமானம் மணிக்கு நூற்றுக்கணக்கான மைல் வேகத்தில் பறந்தாலும், உள்ள இருக்கிற நீங்க, விமானம், இருக்கை எல்லாமே ஒரே வேகத்தில், ஒரே திசையில நகருது. அதனால தான், உங்களுக்குள்ள எந்த அசைவையும் உணர்வதில்லை.அதுபோலத் தான், மரங்கள், கட்டிடங்கள், கடல்கள் - பூமியில் உள்ள எல்லாமே பூமியோடு சேர்ந்து ஒரே வேகத்தில் நகருது. அதனால, நம்ம உடலால் அந்த இயக்க வேறுபாட்டைக் கண்டறிய முடிவதில்லை.பூமி கிட்டத்தட்ட 8,000 மைல்கள் (13,000 கி.மீ) அகலம் கொண்டது. இவ்வளவு பெரிய பரப்பில் நாம ஒரு எறும்பு போல நிற்கிறோம்.பூமியின் அளவு மிக மிகப் பெரியதாக இருப்பதால், அதன் நகர்வு நமக்கு மிகவும் மெதுவாகவும், மென்மையாகவும் (very slow and gentle) உணரப்படுகிறது.விண்வெளியில் குறிப்பிட்டுப் பார்க்க (reference points) அருகில் எந்த அடையாளங்களும் (landmarks) இல்லை. அதனால, நம்ம மூளை இந்த இயக்கத்தைப் பதிவு செய்யத் திணறுகிறது.சோ, நமக்கு அதிவேகத்தில் விண்வெளியில் நாம சுத்திகிட்டு இருக்கோம் ஆனா, அதை உணர முடியல. இதற்குக் காரணம், நம்ம உடலின் இயற்பியல் மற்றும் இந்த அண்டத்தின் பிரம்மாண்டம் தான்பூமி, சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்தாலும், வேகம் மாறும்போதும், அது மிகவும் படிப்படியாகவும் (gradually) மென்மையாகவும் நடக்குது. அதனால நம்மால உணர முடிவதில்லை...