இஸ்ரேல் - காசா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர்களை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் டாங் ஜுன் அழைப்பு விடுத்துள்ளார்.சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச ராணுவ அதிகாரிகளுக்கான மாநாட்டில் பேசிய அவர், போர்களை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு எனவும், எந்த போர்களிலும் யாருக்குமே வெற்றி என்பது கிடையாது எனவும் தெரிவித்தார்.Xiangshan Forum என்ற தலைப்பில் பீஜிங்கில் 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில், ரஷ்யா, பாகிஸ்தான், மியான்மர், சிங்கப்பூர், ஈரான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ராணுவ பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.சர்வதேச பிரச்சனைகளுக்கு தீர்வு காண தன்னை ஒரு மத்தியஸ்தராக நிலைநிறுத்தும் நோக்கில், சீனா இந்த மாநாட்டை நடத்தியுள்ளது.