இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதல் தொடங்கியதன் முதல் ஆண்டு நிறைவை குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டத்தில் பேசிய அவர், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஈரானுடன் எதிர்தாக்குதல் நடத்துவது அவசியம் என குறிப்பிட்டார். மேலும் கடந்தாண்டு அக்டோபர் ஏழாம் தேதி நடந்ததை போல் மீண்டும் ஒருமுறை நிச்சயமாக நடக்காது என்பதை உறுதி அளிப்பதாக நெதன்யாகு கூறினார்.