கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.