ராணுவ உதவிகளை நிறுத்திய கையோடு உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தையும் அமெரிக்கா நிறுத்தியதால், உக்ரைனுக்கு போரில் பெரும் பின்னடவு ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் ஜெலென்ஸ்கி-டிரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், உக்ரைனுக்கு ராணுவ உதவியை நிறுத்துவதாக அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த நாட்டிற்கு அளித்த உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தையும் நிறுத்துவதாக தெரிவித்தார்.