தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 76 ஆராயிரத்து 133 வாக்காளர்களும், குறைந்த பட்சமாக கீழ்வேளூர் தொகுதியில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 230 வாக்காளர்களும் உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். ஆண் வாக்காளர்கள் சுமார் 3 கோடியே 8 லட்சம் பேர் என்ற நிலையில், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 19 லட்சம் பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 6 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் எனவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.