இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். ஜடேஜா கடைசி வரை நின்று போராடியும் அது பலனளிக்கவில்லை. இறுதியாக 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது