ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற மாபெரும் சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 96 சிக்ஸர்கள் அடித்துள்ளது. இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 89 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.