தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிறப்பு பேருந்துகளுக்காக கிராமப்புறங்களில் இருந்து பேருந்துகள் கொண்டு வரப்படுவதால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.