வங்கக்கடலில் உருவான மோன்தா புயல், ஆந்திராவின் மசூலிபட்டினத்தில் கரையைக் கடந்த போது, கடும் சேதம் ஏற்பட்டது. மசூலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில், புயல் கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மசூலிபட்டினத்தில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது. புயலால் பெய்த கனமழையைத் தொடர்ந்து, தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையும் பாருங்கள்... முறிந்து விழுந்த மரம் விரைந்து சென்று அகற்றம்...