திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை சிறப்பு விசாரணை குழுவினர் கஸ்டடியில் எடுத்தனர். திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டுமென்பதால் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 4 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.