தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமரியாதை செய்யும் அதிகாரத்தை சிங்கள அரசுக்கு யார் கொடுத்தது? என வினவியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். 5 மீனவர்களை, சிங்கள அரசு மொட்டையடித்தும், கைவிலங்கிட்டும், சிறைக் கழிவறைகள், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய வைத்தும் கொடுமைப் படுத்தியது மனிதத் தன்மையற்ற செயல் என கண்டனம் தெரிவித்துள்ள அவர், இலங்கையை இந்தியா கடுமையாக கண்டிப்பதுடன், பன்னாட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் குழுவை அனுப்பி, இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க பிரதமரை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.