மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் “டிரெய்ன்” படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசிய அவர், த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் டிரெய்ன் மிகச்சிறந்த படமாக அமையும் எனவும், மிஷ்கின் மிகச்சிறப்பாக படத்தை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.