ராம் சரண் தயாரிப்பில் நிகில் சித்தார்த்தா நடிக்கும் 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் முக்கிய காட்சிக்காக வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என நடிகர் நிகில் சித்தார்த்தா எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.