ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்களுடன் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன. மறைவிடம் ஒன்றில் 3 ஏகே ரக துப்பாக்கிகள், 11 ஏகே ரக தோட்டாக்கள், 11 கையேறி குண்டுகள் மீட்கப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.