பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை எங்கும் பாலியல் கறைகளாக உள்ளதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான இத்தனை கொடுமைகளை தடுக்கத் தவறி கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தவர், இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடராவண்ணம் தடுக்க பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.