கிளாசிக் லெஜெண்ட்ஸ் ஆட்டோமொபைல் நிறுவனம் தனது புதிய பைக்கின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்துள்ளது. மே 15 ஆம் தேதி புதிய மாடல் அறிமுகம் செய்யப்படவிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் புதிய பைக் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அது பெரும்பாலும் யெஸ்டி அட்வெஞ்சர் பைக்காக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.