மதுரையில் மனைவி வேறொருவருடன் சென்ற ஆத்திரம் தீராத கணவன் தனது 2 மகள்களையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.மகள்களின் எதிர்காலத்திற்காக மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டாலும் தொடர்ந்து வாழ முடியாததால் இந்த கொலை அரங்கேறி உள்ளதாக கூறப்படும் நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த சிறுமிகளை கண்டு உறவினர்கள் கத்திக்கதறி கண்ணீர் வடித்தனர்.