கலைஞர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கான தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே முன்கூட்டியே பணம் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் நேரத்தில் கூட வழங்கப்பட்டது - இபிஎஸ் தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகையை நிறுத்தி விடுவார்கள் என முதலமைச்சர் கூறுவது வடிகட்டிய பொய் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2024 மக்களவை தேர்தல் நேரத்தில் கூட மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டதாக தெரிவித்தார். 20 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கவில்லை விதிகளை தளர்த்தி புதிதாக சேர்க்கப்பட்ட 20 லட்சம் மகளிருக்கு 55 மாதங்களாக உரிமைத்தொகை வழங்காத போது மக்கள் பாதிக்கவில்லையா? என்றுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 2 மாதங்களுக்கு முன் சேர்க்கப்பட்ட 20 லட்சம் மகளிருக்கு 5 மாதங்கள் மட்டுமே பணம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். Related Link இன்றைய ராசி பலன்கள் 14022026