ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரியில் சேறு நிறைந்த வயலில் நடத்தப்பட்ட காளைப் பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ரஜௌரின் தனோர் ஜரல்லான் கிராமத்தில் நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாரம்பரிய விளையாட்டான காளைப் பந்தயத்திற்கு விவசாயிகள் ஏற்பாடு செய்தனர். இதில் சேறு நிறைந்த வயலில் ஜோடியாக பூட்டப்பட்ட காளைகளை போட்டியாளர்கள் விரட்டி சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.