நேற்று ஒரே நாளில், ஒரு சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்து 85 ஆயிரம் ரூபாயை கடந்த தங்கம் இன்று சற்று விலை குறைந்துள்ளது. கடந்த 9 மாதங்களாக விலை உயர்ந்து காணப்படும் தங்கம், அவ்வப்போது சற்று விலை குறைந்து வந்தது. நேற்று காலை, மாலை என இரு வர்த்தக நேரத்திலும் தங்கம் விலை ஏற்றம் கண்டு ரூ.85,120க்கு விற்பனையானது. இந்த சூழலில், இன்றும் தங்கம் விலை எகிறுமோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று இறக்கம் கண்டது. அதாவது, ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.10,600க்கும் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800க்கும் தங்கம் விற்பனையாகிறது. வரலாற்றில் முதல் முறையாக நேற்று உச்சம் தொட்ட தங்கம் இன்று சற்று குறைந்தது. எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலை, கணிசமான உயர்வை மட்டுமே சந்திக்கும் என்றும், அதிகபட்சமான விலைக் குறைவுக்கு சாத்தியம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.