சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 73 ஆயிரத்தை மீண்டும் நெருங்கியுள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 40 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 320 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 121 ரூபாய்க்கும் கிலோ ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.