கச்சா எண்ணெய் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 14 ரூபாய் குறைத்திட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 89.94 அமெரிக்க டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை தற்போது 68 டாலராக குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள் விலை குறையும் போது அதன் பயன்களை மக்களுக்கு வழங்க முன்வராதது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.