உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பங்கேற்கிறார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று புனித நீராடுகிறார். தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.