மிகவும் மிகைப்படுத்தப்பட்ட மூன்று நிபந்தனைகளை அதிபர் புதின் விதித்துள்ளதால், உக்ரைன் போர் தற்போது முடிவுக்கு வராது என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தான் பிடித்து வைத்துள்ள உக்ரேன் பகுதிகளை ரஷ்யாவின் பகுதிகளாக அங்கீகரிக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரக் கூடாது, எந்த நாட்டுடனும் அணி சேர மாட்டோம் என உக்ரைன் உறுதி அளிக்க புதின் வலியுறுத்தியுள்ளார்.