அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானத்தில் மெக்கானிக்கல் அல்லது பராமரிப்பு பிரச்சனைகள் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை என ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார். முழுமையான விசாரணை முடிவதற்குள் எந்த முடிவுக்கும் வரக்கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.