சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஸ்பாவில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கு பணியாற்றி வந்த 7 பெண்களிடம் விசாரணை நடத்தியபோது, போலீசாரின் விசாரணைக்கு பயந்த இளம்பெண் ஒருவர் ஜன்னல் வழியே குதித்து தப்ப முயன்றார்.அப்போது அவருக்கு கை, கால், இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மூன்று பெண்கள் அச்சத்துடன் ஜன்னல் ஸ்லாப் மீது அமர்ந்திருந்தனர்.விசாரணையில், இந்த ஸ்பாவை அருள் என்பவர் நடத்தி வருவதும் மேனேஜராக மனோஜ் என்பவர் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.இதனால் தலைமறைவாக உள்ளவர்கள் குறித்தும், ஸ்பா குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.