கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் புதையலுக்கு ஆசைப்பட்டு, செருப்பு தைக்கும் தொழிலாளியை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரசுராம்புராவை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி பிராபகர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது, அவருக்கு ஆனந்த் ரெட்டி என்பவர் லிஃப்ட் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிரபாகர் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், அவர் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், புதையல் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு ஆணை நரபலி கொடுக்க வேண்டும் என ஜோதிடர் கூறியதால், பிரபாகருக்கு லிப்ட் கொடுப்பது போல அவரை கடத்திச்சென்று ஆனந்த் ரெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆனந்த் ரெட்டி மற்றும் ஜோதிடர் ராமகிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.