கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் வாலை பிடித்து வலையில் சிக்க வைத்த இளைஞருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ரங்காபுரா கிராமத்தில் உலா வந்த சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்த நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க போராடி வந்தனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞர் துணிச்சலுடன் சிறுத்தையின் வாலைப் பிடித்து வனத்துறை அதிகாரிகள் விரித்த வலையில் சிக்க வைத்தார். இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.