சுவாமி ஐயப்பன், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு உட்பட்ட பந்தளம் அரண்மனையில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அரண்மனை என்றவுடன் அனைவருக்கும் நினைவு வருவது பிரம்மாண்டம் மட்டுமே, ஆனால், அப்படி இல்லை.கேரள பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் தான்...பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு உட்பட்ட பந்தளம் அருகே அமைந்துள்ள கைப்புழா பகுதியில் ஐயப்பன் வாழ்ந்த அரண்மனை அமைந்துள்ளது. இங்கு, பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது, ஐயப்பன் குளிப்பதற்காக ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் சிறப்பு அம்சம், இந்த நீரானது எப்பவுமே வெதுவெதுப்பாக காணப்படும்.தாம் ஒரு கடவுள் அவதாரம் என்று தெரியாமலேயே, 12 ஆண்டுகள் ஓடி ஆடி விளையாடிய ஒரு புனித தலம். எட்டு அடுக்கு கொண்ட வீடாகும். ஐயப்பன் பயன்படுத்திய ஓலைச்சுவடுகள் மற்றும் கத்திகள் உள்ளிட்டவைகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.ஐயப்பனை பராமரித்த, ராஜ குடும்பத்தை வழி வந்த ராஜராஜ வர்மா கூறுகையில், ’இந்த வீட்டில் தான் ஐயப்பன் வாழ்ந்த இடம்’ என்றார். இந்த அரண்மனையின் அருகே உள்ள கோயிலில், ஐயப்பனுக்கு மகரஜோதி அன்று அணிவிக்கப்படும் ஐயப்பனின் திருவாபரண பெட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுவாமி ஐயப்பன் பந்தள மன்னர்களின் ராஜவம்சத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு ராஜ வாழ்க்கை பிடிக்கவில்லை. ஆனாலும், தந்தையின் ஆசைக்காக வருடத்தில் ஒரு நாள் மட்டும் இளவரசன் கோலம் சூடிக் கொள்வதாக, தன் தந்தையிடம் கூறினர் என்றும், அந்த சம்பிரதாயம் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஐயப்பனின் தந்தை ராஜசேகரன் ஐயப்பனுக்காக சுத்த தங்கத்தினால் ஆன ஆபரணங்களை செய்து இருந்தார், அந்த ஆபரணங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று, ராஜ ராஜ வர்மா தெரிவித்தார்.இதையும் பாருங்கள் - சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் | Sabarimala | CrowdUpdate | TempleNews