ஜிஎஸ்டி பற்றி பேசியது தொடர்பாக அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசனை தனி அறையில் வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது மட்டுமின்றி, அதனை வீடியோ எடுத்து வெளியட்ட பாஜகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, வீடியோ வெளியிட்ட சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததற்கு பதிலாக கண்டித்து இருக்க வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.