அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக இன்று பதவியேற்க உள்ள டிரம்ப், முதல் நாளிலேயே பல முக்கிய ஆணைகளில் கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தபடி, அமெரிக்காவில் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் என்ற சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடுவார் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து தங்கியுள்ள குடியேற்றக்கார ர்களை உடனடியாக வெளியேற்றும் உத்தரவு, 2021 ல் தோல்வி அடைந்த போது தமக்கு ஆதரவாக கேப்பிடல் ஹில்லில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு, மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவிகித வரி உள்ளிட்டவற்றுக்கான ஆணைகளை அவர் முதல் நாளில் பிறப்பிப்பார் என தெரிகிறது.