உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் வீட்டில் நடந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.கணபதியின் சிலைக்கு மோடி ஆரத்தி எடுத்து பூஜை செய்ததை சுட்டிக்காட்டியுள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தலைமை நீதிபதி போன்ற அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இடையேயான இது போன்ற நிகழ்வுகள், நீதித் துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குலைப்பதாக தெரிவித்துள்ளார். நீதித்துறையின் சுதந்திரத்தையும், மக்களின் உரிமையை காக்கும் அதன் பங்களிப்பையும் தலைமை நீதிபதி கேள்விக்குள்ளாக்கி விட்டதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றஞ்சாட்டியுள்ளார்.