தமிழகத்தில் Ph.D. முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், அதே வேளையில் அதன் தரம் திருப்திகரமாக இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு NIRF தரவரிசையில் தமிழகத்தில் உள்ள முன்னிலையில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்களை கௌரவித்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், நம் நாட்டின் அறிவுசார் சொத்துகளை உயர்த்துவதற்கு அதிக தரம் கொண்ட Ph.D. படிப்புகளை கொண்டு வர வேண்டும் என்றார்.