ரஷ்ய அதிபர் புதினை முட்டாள் என விமர்சித்த அந்நாட்டு இசைக்கலைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். வானொலி தொகுப்பாளரான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், போலீஸ் சோதனையின் போது, அவர் தனது வீட்டின் ஜன்னலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.