இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் சில சர்வதேச திரைபட விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது.